Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதகிரீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு ... கல்யாண வெங்கட்டரமண பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு கல்யாண வெங்கட்டரமண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இசைவழி தில்லை தரிசனம்
எழுத்தின் அளவு:
இசைவழி தில்லை தரிசனம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
12:01

மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில், சத்குரு சங்கீத சமாஜ இசை விழாவில் நேற்று ராமகிருஷ்ணமூர்த்தி குழுவினர் வழங்கிய வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக சாவேரி ராகம், ஆதிதாள வர்ணத்தோடு விறுவிறுப்பும் சேர்ந்து கொண்டது. கல்யாணி ராகத்தில் அமைந்த சிதம்பரம் என மனம் கனிந்திட என்று தொடங்கும் தமிழ்பாடல் இசையால் மனதை மயக்கியது. முத்துச்சாமி தீட்சிதரின் அங்காரக மாஸ்த யாம்யஹம் என்ற சுருட்டி ராக க்ருதி சாகித்ய சுத்தமும் பாவமும் கலந்து பாட, வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் இசை ரசிகர்களுக்கு கிடைத்தது. அடுத்து பாரம்பரியமான யதுகுல காம்போதி ராக ஆலாபனையை நேர்த்தியாக வழங்கினார் ராமகிருஷ்ண மூர்த்தி. காலை துாக்கி நின்றாடும் தெய்வமே என்ற முத்து தாண்டவர் பாடலை தமிழ் உணர்வுடன் இசைத்தார்.

தொடர்ந்து ஹிந்தோள ராக ஆலாபனையை தொடங்கிட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியது. தியாகராஜரின் மனசுலோனி மர்மமு என்ற ஆதிதாள கீர்த்தனை விறுவிறுப்புடன் அமைந்தது. அடுத்து கானடா ராக ஆலாபனையை நெக்குருகி பாடி கை தட்டலை பெற்றார் பாடகர். தியாகராஜரின் சுகி எவ்வரோ கீர்த்தனை ராக பாவத்துடன் இருக்க, கச்சேரி சிறந்த நிறைவை தந்தது. வயலின் திருவனந்தபுரம் சம்பத், மிருதங்கம் விஜய் நடேசன், கஞ்சிரா ராஜகணேஷ் தம் திறனை வெளிப்படுத்தினர். இன்று கடம் வித்வான் விக்குவிநாயக்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar