Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தியே உண்மையான செல்வம்: சுவாமி ... நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூரில் குண்டம் விழா கோலாகலம்: பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்டன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2018
05:01

கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த,  டிச.,28ல் பூச்சாட்டுடன் துவங்கியது.

Default Image
Next News

விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதற்காக, நேற்று மாவிளக்கு காப்பு கட்டுதல், பூதவாகன காட்சி நடந்தது. அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள, 60 அடி குண்டத்தில் டன் கணக்கில் எரி கரும்பு குவிக்கப்பட்டிருந்து. ஆகமவிதிப்படி நேற்று இரவு, 10:00 மணியளவில் நெருப்பு மூட்டினர்.  அதன்பின், வீரமக்கள் அடங்கிய குழுவினர், பூமிதிக்க வசதியாக, குண்டத்தை காலை, 6:00 மணிக்கு தயார் செய்தனர். பூமிதிக்கும் பக்தர்கள், வெள்ளாபாளையம் பிரிவில் துவங்கி, திருகினிபாலம், பெருமாள் கோயில் வரை, வரிசையில் நின்றிருந்தனர்.  பூமிதிக்கு நிகழ்ச்சி துவக்கமாக, காலை, 6:10 மணிக்கு, அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 6:20 மணிக்கு திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது.  அதன்பின், குண்டத்தில் இருந்த நெருப்பை, இரு கைகளால் அள்ளி வீசி, சரியாக காலை, 6:30 மணிக்கு, பக்திபரவசத்துடன் தலைமை பூசாரி குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, வீரமக்கள், முக்கியஸ்தர்கள், போலீசார் என வரிசையாக குண்டம் இறங்கினர். மொத்தம், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை, 10:20 மணி வரை,  குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதற்கு முன் கடந்த 2017 ஜன.,12ல் குண்டம் திருவிழா நடந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீரின்றி, பூமிதிக்கும் பக்தர்கள் நீராட வசதியாக, கோவில் சார்பில் ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமிதித்து சென்றனர். நடப்பு குண்டம் திருவிழாவில், தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் ஓடியும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்திருந்தது. கோபியில் இருந்து பாரியூர் கோவிலுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கினாலும், வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar