விளாத்திகுளம்: வேம்பார் புனித தோமையார் ஆலய திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி இன்று நடக்கிறது.விளாத்திகுளம் தாலுகா வேம்பார் தென்மயிலை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் பத்தாம் திருவிழா அன்று தேர்பவனி முக்கிய நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி காலை ஜெபமாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின்னர் தினசரி காலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு திவ்யநற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை திருப்பலியும், மாலை நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் எட்டாம் திருநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நட ந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று காலை திருப்பலியும், இரவு ஆடம்பர திருவிழா சிறப்பு ஆராதனையும் நடந் தது. இன்று பத்தாம் திருநாள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி இன்று நடக்கிறது. காலை 5 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, புதுநன்மை விழாவும் அதனைத் தொடர்ந்து புனித தோமையார் தேர்பவனியும் நடக்கிறது. தேர்பவனி நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள், கிராம நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந் தை செல்வம் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்துள்ளனர்.