பதிவு செய்த நாள்
13
ஜன
2018
12:01
ஈரோடு: கபாலீஸ்வரர் வகையறா கோவில் உண்டியல்களில், 7.63 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்க நாதர், டி.வி.எஸ்., வீதி மகிமாலீஸ்வரர் கோவில்களில், 19 உண்டியல்கள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒருமுறை, இவை திறந்து எண்ணப்படுகின்றன. கடந்த, 10ல் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ஏழு லட்சத்து, 63 ஆயிரத்து, 645 ரூபாய், 14 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. ஐப்பசி அன்னாபி?ஷகம், வைகுண்ட ஏகாதசி, சனி பெயர்ச்சி, ஆருத்ர தரிசனம் உள்ளிட்ட விழாக்கள் நடந்து முடிந்த நிலையில், உண்டியல் எண்ணப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும், இரண்டு லட்சம் ரூபாய் காணிக்கை அதிகரித்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.