பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
ஈரோடு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போட்டவாறு, வீர குமாரர்கள் ஈரோட்டில் ஊர்வலம் சென்றனர். ஈரோடு, சீரங்க வீதி தில்லை நகரில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 22ம் ஆண்டு தை மாத பண்டிகை, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ?ஹாமம், காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி பூஜை செய்து, சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான கத்தி போடும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. காரை வாய்க்கால் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட வீர குமாரர்கள், கத்தி போட்டவாறு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பெண் பக்தர்கள், கரகம் தூக்கி கோவிலுக்கு சென்றனர். மாநகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் சென்றது. பின்னர் சவுடேஸ்வரி அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து ராகு தீப ஜோதி ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.