பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கடைவீதி பால கணேசர் கோவிலில், தை மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, காலை, 7:30 மணிக்கு, கரும்பு பால் மற்றும் திரவியங்கள் அபிேஷகம், சொர்ண அங்கி அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, கோவில் பகுதி கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தை மாதம் பொங்கல் விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் திருக்கல்யாண தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோன்று, பொள்ளாச்சி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.