பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
மூணாறு: சபரிமலையில் நேற்று மகர விளக்கு ஏற்றிய போது, மூணாறில் உள்ள காளியம்மன், நவ கிரக, கிருஷ்ணர் கோயில் சார்பில், அருகில் உள்ள ஹனுமான் மலையில் 30,001 தீபங்கள் ஏற்றபட்டன. சபரிமலையில் நேற்று மகர விளக்கு ஏற்றியபோது, மூணாறில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் நடந்தன. தேவிகுளத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் அய்யப்பனுக்கு தீபாராதனையும்,பூஜைகளும் நடந்தன. மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அய்யப்பனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. அதே போல் மூணாறில் உள்ள காளியம்மன், நவகிரக, கிருஷ்ணர் கோயில் சார்பில், அருகில் உள்ள ஹனுமான் மலையில் ஆண்டுதோறும் மகரவிளக்கின்போது, தீபங்கள் ஏற்றப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று 30,001 தீபங்கள் ஏற்றப்பட்டன.