கீழக்கரை; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு, மகர ஜோதி தரிசனம் நடந்தது. நேற்று அதிகாலை கணபதி ஹோமமும், மாலை 4:00 மணிக்கு வல்லபை விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மாலை 6:30 மணிக்கு மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும் நேரத்தில், கோயில் வெளிபிரகாரத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் முழங்க மகரஜோதி ஏற்றப்பட்டு தீபதரிசனம் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மோகன்சாமி, ரெகுநாதபுரம் வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.