பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள திம்மசந்திரம் சப்ளம்மாதேவி கோவிலில், மாடுகள் திருவிழா நேற்று துவங்கியது. ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில், திம்மசந்திரம் சப்ளம்மாதேவி கோவில் உள்ளது. 200 ஆண்டு பழமையான இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாடுகள் திருவிழா நடப்பது வழக்கம். இதில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பலர் பங்கேற்று, தங்களது மாடுகளை விற்பனை செய்வர். இந்த ஆண்டுக்கான மாடுகள் திருவிழா, நேற்று காலை துவங்கியது. அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., கோபிநாத் ஆகியோர், சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை, 9:00 மணிக்கு புஷ்ப அலங்காரம் நடந்தது. வரும், 18 வரை, அன்னதானம் நடக்கிறது. வரும், 20 காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு, 7:00 மணிக்கு கோலாட்டம், 9:00 மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது.