பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
திருப்பூர் : “பகவானை தொழும் பக்தனுக்கு, தொண்டனாக இருக்க வேண்டும்; பகவானை விட, பக்தன் உயர்ந்தவன்,” என, திருச்சி கல்யாணராமன் பேசினார். அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்Œ@நயர் @காவிலில், ஒரு மாதம் நடந்த கம்பராமாயண தொடர் சொற்பொழிவு, @நற்று முன் தினம் நிறைவடைந்தது. அதில், ‘ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்’ என்ற தலைப்பில், அவர் பேசியதாவது: எல்லா கடவுள்களையும், சமமாக பாவிக்க வேண்டும். சைவ, வைணவ வித்தியாசம்பார்க்க@வ கூடாது. இஷ்ட தெய்வங்களை வணங்க வேண்டும். அதே வேளையில், குலதெய்வ வழிபாடும் மிக முக்கியம். அவரவர் வசிக்கும் இடங்களில் உள்ள கிராம தெய்வங்களையும், கட்டாயம் வழிபட வேண்டும். மனிதர்களிடம், அஞ்ஞானம் மண்டி கிடக்கிறது. அதனை, துடைத்து விட்டால், மனிதர்களின் வாழ்க்கை ‘பளிச்’ சென்று, அழகாக மாறிவிடும். வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை, மளிகை கடைக்கு போனில் அழைத்து கூறினால், வீட்டுக்கே வந்து, ‘டோர் டெலிவரி’ செய்கின்றனர். அதுபோல், கடவுளிடம் நம் கஷ்டங்களை கூறினால்தான், அதற்கான தீர்வு கிடைக்கும்.
எந்த நேரமும், ‘ராமா ராமா’ என நாமத்தை சொல்லி கொண்டிருந்தால், நமது குறைகளை பகவான் தீர்த்து வைப்பார். வங்கியில் பணிபுரியும் மானேஜரை காட்டி லும், பியூனுக்குதான் செல்வாக்கு அதிகம். என@வ, பகவானை தொழும் பக்தனுக்கு, தொண்டனாக இருக்க வேண்டும். பகவானை விட, பக்தன் உயர்ந்தவனாக இருக்கிறான். உடலாலும், மனதாலும் நாம் யாருக்கும் குற்றங்களை இழைக்க கூடாது. குற்றம் செய்தவனை காட்டிலும், அந்த குற்றத்துக்கு துணை போனவனுக்குதான், முதலில் தண்டனை கிடைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். ஸ்ரீ வீர ஆஞ்Œ@நய பக்தர் @பரவை நிறுவனர், ஈஸ்வரன் நன்றி கூறினார்.