Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த கட்டளைகளை மீறுவது மதிப்பை ... வரட்டும் அந்த மனப்பக்குவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தண்ணீர்.... தண்ணீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2018
02:01

மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் தண்ணீர் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டுமானால், அதை அரசியலாக்கும் காலம் இது. ஆனால், தண்ணீர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது இறை வழிபாட்டில் மிக முக்கியமானதாகும். ஒருவர் இறந்த பிறகு அவர், அல்லாஹ் முன்பு கொண்டு வரப்படுவார். அவரிடம் அல்லாஹ், “ஆதமின் மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு புகட்டவில்லையே,” என்பான். அதற்கு அந்த மனிதன், “இறைவா! நீயோ இந்த உலகத்தின் அதிபதியாக இருக்கும் போது நான் உனக்கு எப்படி தண்ணீர் தருவேன்,” என்று புரியாமல் கேட்பான். மேலும், இறைவன் தன்னிடம் தண்ணீர் கேட்டது எப்போது என தெரியாமல் குழம்புவான்.

அப்போது அல்லாஹ், தன்னுடைய அடியார் ஒருவரின் பெயரைச் சொல்லி, “இந்த நபர் இந்த நாளில் இந்த நேரத்தில் உன்னிடம் தண்ணீர் கேட்டார். நீ கொடுக்கவில்லையே,” என ஞாபகப்படுத்துவான். அந்த மனிதனுக்கு அந்த நிகழ்வு நினைவுக்கு வரும். அப்போது அல்லாஹ் அவனிடம், “நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால், நீ என்னிடத்தில் அதனைப் பெற்றிருப்பாய்,” என்பான். தண்ணீர் கேட்டவர்களுக்கு “இல்லை” என மறுக்காமல் கொடுத்தால், இறைவன் பெருமழை பெய்வித்து இருதரப்பு பிரச்னையையும் பூர்த்தி செய்வான். இனியேனும் தண்ணீர் பிரச்னையில் மாநிலங்களும், அருகருகே உள்ள ஊர் மக்களும் பகிர்ந்து குடிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar