பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
சென்னை: திருவள்ளுவர் திருக்கோவில் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், 350 மாணவ - மாணவியர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ளது, திருவள்ளுவர் திருக்கோவில். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜன., 15ல், திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படுகிறது. இக்கோவில் சார்பில், நேற்று காலை நடந்த விழாவில், திருவள்ளுவர் மற்றும் வாசுகி சிலைகளுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலையில், திருவீதி உலா நடந்தது. மேலும் இந்த விழாவில், மயிலாப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, 27 பள்ளிகளைச் சேர்ந்த, 350 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றோருக்கான பரிசுகளை, அறநிலையத் துறை இணை கமிஷனர், லட்சுமணன், நட்ராஜ், எம்.எல்.ஏ., ஆகியோர் வழங்கினர். இதையடுத்து, ’திருவள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது தனிமனித மேம்பாடா, சமுதாய மேம்பாடா’ எனும் தலைப்பில், பேராசிரியர், சேயோன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர், லட்சுமிகாந்த பாரதிதாசன் செய்திருந்தார்.