பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கனுப்பாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2018 02:01
பரமக்குடி, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கனுப்பாரி உற்ஸவ விழா நடந்தது. பரமக்குடி பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கனுப்பாரி உற்ஸவம் நடப்பது வழக்கம்.இதன்படி சுந்தரராஜப் பெருமாள் நேற்று காலை குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பசு மாடுகளை பராமரிக்கும் விதமாக அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கனுப்பாரி உற்ஸவம் நடத்தப்படுவது வழக்கம். காலை 10:00மணிக்கு புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஷ்ட்ரபதி தெரு, எஸ்.எஸ்., கோயில், ஜி.வி. பந்த், சின்னக்கடை தெரு வழியாக மாலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மேல் பாகவதர் கோஷ்டியினர் பஜனைகள் பாடிய படி சன்னிதானம் வந்தடைந்தனர். பின்னர் இரவு 9:00 மணிக்கு மகாதீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது.