பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
வால்பாறை: வால்பாறையில் மிகவும் பழமை வாய்ந்த நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை நடுமலை எஸ்டேட் வடக்கு பிரட்டு பகுதியில், துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலின், 135ம் ஆண்டு திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் வரும், 20ம் தேதி இரவு, 8:00 மணிக்கு சக்தி கும்பம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 21ம் தேதி நடுமலை தெற்கு பிரட்டு விநாயகர் கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார். வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு பொங்கல் பூஜை, நெய்வேத்தியம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. வரும், 23ம் தேதி வரை நடக்கும் விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
* வால்பாறை அடுத்துள்ள நடுமலை தெற்கு டிவிஷனில் எழுந்தருளியுள்ள பூமாரியம்மன், காளியம்மன் கோவிலின், 58ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 23ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.