பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவரடிபாளையம் கிராமத்தில், பூப்பொங்கலான நேற்று வீட்டிற்கு வரும் சலகை மாடுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மக்கள் வழிபட்டனர். கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவரடிபாளையம் கிராமத்தில், தை பொங்கல் நாளில் பசு கன்று ஈன்றால், அந்த மாட்டை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று, பசு உரியமையாரின் தாய்மாமன் வீட்டுக்கு மாட்டை அழைத்து செல்வது, வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்மாமன் வீட்டை சேர்ந்தவர்களுக்கு புத்தாடை கொடுத்து, விருந்து வைக்கப்படுகிறது. பின், மாட்டின் இரண்டு காதுகளையும்கத்தியால் கீறி, அந்த மாடு சாமிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மாட்டின் கழுத்தில் மஞ்சள் துணியை கட்டி, சலங்கை அணிவித்து, மஞ்சள் நீர் ஊற்றி,ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்து செல்லப்படுகிறது. அதன்படி, நேற்று பூப்பொங்கலன்று சலங்கை மாடுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்து செல்லப்பட்டன. சலங்கை மாடு வருவதற்காக காத்திருந்த மக்கள், அதன் மீது மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய பழம் வைத்து தீபராதனை காண்பித்து வழிபட்டனர். கிராமத்தில் இருந்து, கோதவாடி ஆல்கொண்ட திருமால் கோவிலுக்கு சலங்கை மாடு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு வழிபாட்டுக்கு பின்கிராமத்துக்கு திரும்ப அழைத்து வந்தனர்.