பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
சென்னிமலை: சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் பெருவிழா, 15 நாட்கள் நடக்கும். நடப்பாண்டு விழா, வரும், 23ல் காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24ல் இரவு பல்லக்கு சேவை, 25ல் மயில் வாகனக்காட்சி, 27ல் பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சி நடக்கிறது. 28ல், யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா, 29ல் மாலை, 6:00 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவில் காமதேனு வாகனக்காட்சியும் நடக்கிறது. 30ல் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்து குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதையடுத்து முக்கிய நிகழ்வான தேரோட்டம், 31ல் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், காலை, 7:00 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,2ல் மாலை, 5:00 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. பிப்.,?ல் இரவில் பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 3ல் தெப்போற்சவம், பூத வாகன காட்சி நடக்கிறது. பிப்.,?ல் காலை, வள்ளி தெய்வானை சமதே முத்து குமாரசாமிக்கு மகா அபி?ஷகம் நடக்கிறது. அன்றிரவு நடராஜப் பெருமான் வெள்ளி விமானம், சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா அதிகாலை வரை நடக்கிறது. அன்று சென்னிமலையில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். பிப்.,5ல் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் விழா நிறைவடைகிறது.