ஜலகண்டாபுரம்: காளியம்மன் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜலகண்டாபுரம், சந்தைப்பேட்டை பழக்கடை காளியம்மன் திருவிழா, கடந்த, 6ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சத்தாபரணம், சக்தி அழைத்தல், அக்னிகரகம் எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று, திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மக்கள் பலர், சுவாமியை தரிசனம் செய்தனர்.