பதிவு செய்த நாள்
19
ஜன
2018
12:01
திம்மராஜம்பேட்டை: திம்மராஜன் என்ற அரசன் ஆட்சி செ ய்ததால், திம்மராஜம்பேட்டை என, ஊர் பெயராக விளங்கி வருகிறது. இங்குள்ள மக்களின், பிரதான வாழ்வாதாரமாக, நெசவுத்தொழில் மற்றும் அதை சார்ந்த பிற கூலித்தொழில்கள் உள்ளன. போஜராஜன் எனும் அரசன், பர்வதவர்த்தி சமேத, ராமலிங்கேஸ்வரர் கோவிலை கட்டிக்கொடுத்துள்ளார். இந்த கோவிலை, முறையாக பராமரிக்கவும், நித்யபூஜைக்காவும் சில ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதில் கிடைக்கும் வருவாயில் தான், நித்ய பூஜைகள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், மாசி மாத பவுர்ணமி தினத்தில் திருவிழா சிறப்பாக நடக்கிறது. அதே மாதத்தில், இளையனார் வேலுார் முருகன் எழுந்தருளுவது மற்றொரு சிறப்பு. இது தவிர, சனிப்பெயர்ச்சி, கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, புரட்டாசி அமாவாசை தினத்தில், பித்ரு கடன் செலுத்துதல், வட ராமேஸ்வரத்திற்கு இணையாக பரிகாரங்கள் செய்யப்படுகின்றன என, கிராம மக்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு, பாலாறு குடிநீர் கிடைப்பது வரப்பிரசாதமாக உள்ளது.