பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில், ஆய்வாளர் ஜெயசித்ரா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், முன்னாள் அறங்காவலர் சபாபதி, ஆன்மிக நண்பர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் வருமானமாக ஒரு லட் சத்து 94 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.