விழுப்புரம் அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2018 12:01
விழுப்புரம்: காணை கிராமத்தில் அமைந்துள்ள அழகு நாச்சியம் மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை யொட்டி, நேற்று காலை 8.00 மணிக்கு அழகு நாச்சியம்மன் கோவிலில் நான்காம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, 10.30க்கு கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அழகு நாச்சியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு ஸ்ரீ விநாயகர், முருகர், அழகு நாச்சியம்மன், முத்துமாரியம்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் காணை கிராம மக்கள் செய்திருந்தனர்.