மானாமதுரை: கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதி பணிகள்மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நிறைவு பெற்றுள்ளது. சதாசிவபிரம்மேந்திராள் பாகிஸ்தானின்கராச்சி மற்றும் தமிழகத்தில் நெரூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்பட 5 இடங்களில்ஜீவசமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்குள்சோமநாதர் சன்னதிக்கு பின்னால் அவரது சன்னதி உள்ளது.ஆண்டுதோறும் சித்திரை மாதம் மானாமதுரையில் சதாசிவபிரம்மேந்திராள் ஆராதனை நடந்து வருகிறது. கர்நாடக இசைக்கலைஞர்கள் இங்கு வந்து கீர்த்தனைகளை பாடி வழிபாடு நடத்துவர். ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் சதாசிவபிரம்மேந்திராள் சன்னதிக்கு, ஆராதனை கமிட்டியினர் நிதிஉதவி வழங்கியுள்ளனர். தற்போது சன்னதி முழுவதும் கருங்கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கும்பாபிேஷகம் நடத்தப்பட உள்ளது.