விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிடாகம், அத்தியூர் திருக்கை கிராம பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரைகளில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி, காலை 7.00 மணி முதல் ஜானகிபுரம், கொளத்துார், அத்தியூர் திருக்கை, சாலாமேடு, ஜானகிபுரம் கிராம பகுதிகளில் உள்ள அங்காளம்மன், விநாயகர், முருகன், சிந்தாமணி அம்மன், பாண்டுரங்கன் உள்ளிட்ட சுவாமிகள் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி செய்து அலங்கரித்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை செய்து வழிபாடுகள் நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.