கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.5 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2018 12:01
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில், 5 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் மாலா கூறுகையில், கோவிலில் உள்ள, ஐந்து உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. அதில், ஐந்து லட்சத்து, 1,467 ரூபாய் இருந்தது. மேலும், 23 கிராம் தங்கம், 117 கிராம் வெள்ளி இருந்தது. இவை, கோவில் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படும், என்றார்.