விழுப்புரம்: காணை அய்யப்பா சேவா சங்கம் சார்பில், அய்யப்பசாமிக்கு மகர சங்கராந்தி கற்பூர தீப ஜோதி நடந்தது. விழுப்புரம் அருகே உள்ள காணை செல்வ விநாயகர் கோவில் வளாகத்திலுள்ள, அய்யப்ப சாமிக்கு, அய்யப்பா சேவா சங்கம் சார்பில் 17 ம் ஆண்டு மகர சங்கராந்தி கற்பூர தீப ஜோதி விழா காலை மகா தீபாராதனையுடன் நடந்தது. மாலையில், சிம்ம ரதத்தில், அய்யப்ப சாமியின் திருமாட வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காணை அய்யப்பா ஆன்மீகப் பேரவை மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.