சென்னை மயிலாப்பூரில், முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பால் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2018 09:01
சென்னை: மயிலாப்பூரில், பழமைவாய்ந்த முண்டகக்கண்ணியம்மன் கோவிலில், தை வெள்ளி யை முன்னிட்டு பால் ஊற்றி ஏராளமான நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டககண்ணியம்மன், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர் த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக் கிறது. இம்மரத்திற்குள் நாக புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் நாகதேவதைக்கு பால், பன்னீர், மஞ்சள் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். கோயில் முகப்பில் அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். (ஜன.19ல்) தை வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்தும், நாகதேவதைக்கு பால் <<ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.