பதிவு செய்த நாள்
20
ஜன
2018
09:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்துகாளியம்மன், சிறப்பு அலங்காரத்தில் நேற்று முன்தினம் இரவு, ரதத்தில் பவனி வந்தார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில் கடந்த, 11ல் பூமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. 13ல், மலர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. அதில், சூலவேலுடன் விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள், கோபி சாரதா மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கிருந்து தெப்போற்சவம் முடிந்து, சூலவேலுடன் விநாயகரும், அம்மனும், கோபி நகர பகுதிகளில் ஊர்வலம் சென்றனர். பின், கோபி மற்றும் புதுப்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, பாரியூர் ரோடு, மேட்டுவலவு, வீராசாமி வீதி உள்ளிட்ட வீதிகளில் அம்மன் ரதத்தில் திருவீதி உலா சென்றார். நேற்று நஞ்சகவுண்டன்பாளையத்தில், மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இன்றிரவு ஆகம விதிப்படி பூஜைகள் முடிந்து, அம்மன் பாரியூர் கோவிலை அடைகிறார்.