சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு ஜன (20) சனிக்கிழமை காலை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2018 10:01
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் வெள்ளிக்கிழமை இரவு நிறைவடை ந்தது. ஜன(20) சனிக்கிழமை காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக் கப்படுகிறது.
சபரிமலையில் கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. 16 முதல் 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடந்தது. 18-ம் தேதி காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று, மதியம் களபபூஜை நடந்தது.வெள்ளக்கிழமை காலை 3:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜை கள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப் பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவடைந்தது. பின்னர் மாளிகைப்புற த்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறை ப்படி இந்த பூஜையை நடத்தினர்.
சனிக்கிழமை ஜன(20) காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.