பதிவு செய்த நாள்
20
ஜன
2018
10:01
உடுமலை: உடுமலை அருகே, கணக்கம்பாளையம் ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. உடுமலை, கணக்கம்பாளையம் ஊராட்சி, ஸ்ரீராம் நகர் எக்ஸ்டன்சன் - சிந்துநகர் பகுதியில் உள்ளது ராஜகணபதி கோவில். கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.19) அதிகாலை, 4:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, சூரிய பூஜை, மூல மந்திர ஹோமம், துவார பூஜை நடந்தது. காலை, 7:35 மணி முதல் 8.50 மணி வரை கடங்கள் புறப்பாட்டுடன், ராஜ கணபதி, உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு விமான சாலஹாரம் மூலம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையுடன், தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.