பதிவு செய்த நாள்
20
ஜன
2018
02:01
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் ராம அனுமான் ஆஞ்சநேயர் கோவிலில் ஜன (19) கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கழுக்குன்றம், கருங்குழி சாலை, பெரிய தெருவில், 12 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராம அனுமான் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இக்கோவிலின், இரண்டாம் ஆண்டு மஹா கும்பாபி ஷேகம், ஜன (19) காலை, 9:30 மணிக்கு நடந்தது. விழாவை ஒட்டி, பூர்வாங்க பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோவில் கோபுர கலசத்தின் மீது பட்டாச்சாரியார் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.விழாவில், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.