அன்னூர் திருமுருகன் அருள்நெறிக் கழகம் சார்பில், அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2018 02:01
அன்னூர்: அன்னூரில் உள்ள திருமுருகன் அருள்நெறிக் கழகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு செல்லும் விழா, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நடக்கிறது. இவ்வாண்டுக்கான விழா நடந்தது.
மார்கழி மாதம் மாலை அணிந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக, முருகப்பெருமானுக்கு அலங்கார பூஜை நடந்தது. ஆறுபடை வீடுகளுக்கு செல்ல முருக பக்தர்களுக்கு கட்டு கட்டப்பட்டது. ராமசாமி தலைமை வகித்தார்.