வால்பாறை: வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலின், 34ம் ஆண்டு திருவிழா, ஜன(19) காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரவின் திருக்கொடி ஏற்றினார்.விழாவில் வரும், 24ம் தேதி காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. வரும், 25ம் தேதி வரை நடக்கும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.