பதிவு செய்த நாள்
22
ஜன
2018
02:01
பெருந்துறை: பெருந்துறை அருகே, கும்பாபிஷேக விழா, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பெருந்துறை அடுத்த, நசியனூர், வேட்டைப்பெரியாம்பாளையம், விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, ஊராட்சிக்கோட்டை பகுதி காவிரி ஆற்றில் இருந்து, நேற்று காலை, புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தயிர்பாளையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், காவடி ஆட்டம், சலங்கை ஆட்டத்துடன், கோவிலை வந்தடைந்தது. இதில், திரளான பெண்கள், மக்கள் பங்கேற்றனர்.