கரூர்: கரூர் அருகே, கருப்பண்ண சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காளியப்ப னூரில், கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மஹா கும்பாபிஷேகம், விநாயகர் பூஜையுடன் கடந்த, 20ல் துவங்கியது. நேற்று அதிகாலை, கும்ப பூஜைகள் செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. கரூர் தட்சிணாமூர்த்தி குருக்கள் முன்னிலையில், கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.