பதிவு செய்த நாள்
23
ஜன
2018
12:01
கூடலுார்:கூடலுார் ஓவேலி சாலையில், சக்தி முனீஸ்வரர் கோவில், திருவிழாவில், பால்குட ஊர்வலம் நடந்தது.கூடலுார் ஓவேலி சாலையில் சோதனை சாவடி அருகேயுள்ள, சக்தி முனீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. கணபதி ஹோமம், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, உற்சவ மூர்த்தி ஊர்வலம் ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் காலை சிறப்பு வழிபாடுகள், காலை, 11:30 மணிக்கு கூடலுார் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் ஊட்டி, ஓவேலி சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, திருத்தேர் வீதி உலா முக்கிய சாலைகள் வழியாக வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பூஜைகள் கொடுத்து வழிபட்டனர். மூன்று நாட்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.