Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டாபிஷேகம் மதுர காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழாக்கோலம் காணும் இடைப்பாடி: பழநிக்கு யாத்திரை செல்லும் 50 ஆயிரம் பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
01:01

இடைப்பாடி: இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பழநி மலைக்கு வரும், 27 முதல் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த, 358 ஆண்டுகளாக இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, முருக பக்தர்கள் இடைப்பாடியிலிருந்து பழநிக்கு ஆன்மிக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாச்சியூர், ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு பகுதியினர், இடைப்பாடி வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள், பருவதராஜகுல மீனவ சமூகத்தினர், சித்தூர், புளியம்பட்டி பகுதி வன்னியர்குல சமூகத்தினர் என ஏழு குழுக்களாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் ஆன்மிக பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இடைப்பாடியிலிருந்து மேட்டுத்தெரு பகுதியினர், ஆலச்சம்பாளையம் பக்தர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும், 27ல் இருந்தும், வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி பகுதி வன்னிய சமூகத்தினர், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும், 28ல் இருந்தும், பருவதராஜகுல மீனவ சமூகத்தினர், 20 ஆயிரம் பேர் வரும், 29ல் இருந்தும், சித்தூர், ஆடையூர், பக்கநாடு பகுதிகளை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும், 30ல் இருந்தும், பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். முருக பக்தர்கள் பள்ளி பாளையம், தண்ணீர் பந்தல், வட்டமலை முருகன் கோவில், அமராவதி ஆகிய இடங்களில், உணவு சமைத்து சாப்பிட்டு, பழநிமலைக்கு ஒருவாரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். மேட்டுத்தெரு பகுதியினர் பிப்., 2, ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிப்., 3, வெள்ளாண்டிவலசு சமுதாய மக்கள் குழுவை சேர்ந்தவர்கள் பிப்.,4, கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு மக்கள் பிப்.,6ல், பழநி மலையில் உள்ள முருகனை தரிசிக்க செல்கின்றனர். பருவதராஜகுல மீனவ சமூகத்தினர் பிப்.,5, பழநி மலையில் உள்ள முருகனை தரிசித்துவிட்டு அன்று இரவு பழநி மலையில் தங்குகின்றனர். வழக்கமாக, பழநி மலையில் முருகனை தரிசிப்பதற்கு, அதிகாலை, 4:00 மணியிலிருந்து இரவு, 9:00 மணி வரை சுவாமி தரிசனமும், மலைக்கு செல்வதற்கான நடைபாதையும் திறந்து இருக்கும். இரவு, 9:00 மணிக்கு மேல் எவரையும் பழநி மலையில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இடைப்பாடியிலிருந்து செல்லும் பருவத ராஜகுல மீனவ சமூகத்தினருக்கு மட்டும், ஆண்டுதோறும் ஒரு நாள் சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு பிப்., 5ல், பழநிமலையில் இரவில் தங்க, பருவதராஜகுல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar