பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2018 01:01
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் நடக்கிறது. நேற்று காலை, புதிதாக நிறுவப்பட்ட கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, மேள தாளங்களுடன், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர். பின், சிறப்பு அபிஷேகங்கள் செய்து, சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ’இன்று மாலை, 4:30 - 5:30 மணிக்குள் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்’ என, அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.