திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் முருகன் வள்ளி மணாளனாக மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பாலசுப்பிரமணியர் என்னும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். முருகன் தவிர்த்த மற்ற தெய்வங்களின் திருமேனிகள், முருகனின் வாகனமான மயில் மரகதக்கல்லால் ஆனவை. முருகனுக்கு வலப்பக்கம் அண்ணா மலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சிறுவாபுரி முருகனை மனதில் நினைத்தாலும் திருமணம் விரைவில் கைகூடும்.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து 30 கி.மீ., கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து மேற்கே 3 கி.மீ., தொடர்புக்கு: 94442 80595, 94441 71529