பதிவு செய்த நாள்
24
ஜன
2018
04:01
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சாலாமேடு எஸ்.ஆர்., நகரில் உள்ள ஸ்ரீ அஷ்டவராகி கோவிலில், வசந்த பஞ்சமி உற்சவ விழா மற்றும் வராகி பைரவர் திருக்கல்யாணம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ஸ்ரீ வராகி பைரவர் திருவீதி உலா, 63 சக்திகள் விடையாற்றி நிகழ்ச்சி மற்றும் கும்பம் கொட்டுதல் பூஜை நடந்தது. இதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி ஸ்ரீ சீனுவாசன், சீதாராமன், சரஸ்வதி பிரம்மா, பத்ரகாளி வீரபத்திரன், ஆண்டாள் அழகர், வள்ளி தெய்வானை முருகன், ஸ்ரீ வராகி பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஸ்வஸ்தி ஸ்ரீ தவளகீர்த்தி, ஸ்ரீ வராகி மணிகண்ட, பாலமுருகன் சுவாமிகள் முன்னிலையில், சுவாமிகளுக்கான திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வராகி வாக்கு பீடாதிபதி சாக்த மகேஷ்ராம் செய்திருந்தார்.