புல்லரம்பாக்கம் : திருவள்ளூர் அருகே, குமாரசுவாமி கோவிலில், 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடந்தது. புல்லரம்பாக்கம் வள்ளி தேவசேனா சதேம குமாரசுவாமி கோவிலில், 108 லிட்டர் பால்குட விழா, நேற்று நடந்தது. காலையில், பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.பின், மூலவருக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.