செரப்பணஞ்சேரி : செரப்பணஞ்சேரி நீராடும் கன்னியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி கிராமத்தில், நீராடும் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அப்பகுதி மக்கள் அண்மையில், கட்டி முடித்தனர். இதை தொடர்ந்து, கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதுபோல, ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டையில், ஷீரடி சுவர்ணாகர்ஷண சாய் பாபா கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.