முனியாண்டி கோயிலில் 100 கிடா, 150 சேவல் பலி கொடுத்து அதிகாலையில் கம கம பிரியாணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2018 12:01
திருமங்கலம்: திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் 100 கிடா, 150 சேவல் வெட்டி முனியாண்டிக்கு படைத்து அதிகாலை 4:00 மணிக்கு பிரியாணி விருந்து தடபுடலாக நடந்தது. வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிடிமண் எடுத்து நாடு முழுவதும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை தை 2வது வெள்ளிக்கிழமை கூடி முனியாண்டிக்கு விழா எடுப்பார்கள். வெள்ளிக்கிழமை இரவு வடக்கம்பட்டி, அலங்காரபுரம், பொட்டல்பட்டி கிராமமக்களும் சேர்ந்து பால்குடம், நிலைமாலை, பூஜை பொருட்களுடன் ஊர்வலம் வந்து முனியாண்டி சாமிக்கு அபிேஷகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தினர். பின்னர் பக்தர்கள் நேர்ந்து விட்ட 100 ஆட்டு கிடாய்கள், 150 சேவல்களை அறுத்து படைத்து வழிபாடு நடத்தி பிரியாணி சமைக்கப்பட்டது. அதிகாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பிரியாணி விருந்து நடந்தது.