பதிவு செய்த நாள்
29
ஜன
2018
12:01
வீரபாண்டி: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. வீரபாண்டி, இனாம்பைரோஜி, பிச்சம்பாளையம் திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ள கோமுட்டி முனியப்பன், பெரியாண்டவர் கோவில் கும்பாபி?ஷகம் இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி யாகம் நடந்தது. தொடர்ந்து நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சின்ன மாரியம்மன் கோவிலிலிருந்து, ஊர்வலமாக, முனியப்பன் கோவிலுக்கு வந்தனர். இரவு, 10:00 மணிக்கு, புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இன்று, விநாயகர் பூஜை, நான்கு கால யாக பூஜை முடிந்து, காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று, சிலைகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.