பெரியவடமலைபாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2018 01:01
பவானி: பெரியவடமலைபாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் நடந்தது. பவானி, ஜம்பை, பெரியவடமலை பாளையத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணி முடிந்தது. இதையடுத்து கடந்த, 25ல் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று காலை, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பவானி, ஜம்பை, தளவாய்பேட்டை உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.