பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
கூடலுார் : கூடலுார் மங்குழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கூடலுார் மங்குழி பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா, நேற்று முன்தினம், துவங்கியது. அதிகாலை, 5:00 கணபதி ஹோமம், 7:00 மணிக்கு உஷபூஜை, 9:00 அற்புதசாந்தி ஹோமம், 11:00 மணிக்கு மணிவிளக்கு பூஜை, 11:30 மணிக்கு உச்சி பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், மண்டல பூஜை, தியானாதிவாசம், பீடாதி வாசம், வாஸ்துபலி,
அத்தாழ பூஜை நடந்தது. நேற்று, காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து உஷபூஜை, அதிவசம் விடர்த்தி பூஜை நடந்தது. 7:30 மணிக்கு தேவ பிரதிஷ்டைகள் நடந்தது. காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 10:30 மணிக்கு நவகம், பஞ்சகவ்யம், 10:30 மணிக்கு உட தேவர்களுக்கு கலச பூஜையும், 11:00 மணிக்கு அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.