பதிவு செய்த நாள்
30
ஜன
2018
11:01
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. சிவனுக்கு உகந்த நாளாக பிரதோஷம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் சிவன் மற்றும் நந்திக்கு பல்வேறு பொருட்களால் அபி?ஷகம் செய்து, பூஜை செய்யப்படும். தை மாத பிரதோஷ நாளான நேற்று, சிவனுக்கு உகந்த, திங்கட்கிழமை, திருவாதிரை நட்சத்திரம் மற்றும் திரயோதசி இந்த, மூன்றும் ஒரு சேர வந்தது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு வரும்.
இந்த அபூர்வ பிரதோஷ தினத்தை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று காலை முதலே சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவிலில், மகாலிங்கேஸ்வரருக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல், சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின், மாலை 5:30 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, பால், பண்ணீர், தேன், சந்தனம், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், காரிமங்கலம் அபிதகுஜலாம்பால் சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவில், சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.