கடலாடி: மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு சன்னதி முன் பிரதோஷ நந்திக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் சிவநாம அர்ச்சனை, பிரதோஷ பக்தி பாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை அன்னதான பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
மேலக்கிடாரத்தில் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத காமாட்சியம்மன் கோயிலில் பிரதோஷம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்தார்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன் பிரதோஷ நந்திக்கு மூலிகை அபிஷேகம் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி, சிவபுராணம் பாடி சிவநாம அர்ச்சனை செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கீழக்கரை மீனாட்சி சொக்க நாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு,உற்சவர் பிரகார வீதியுலா நடந்தது.