பதிவு செய்த நாள்
31
ஜன
2018
10:01
இன்று சந்திரகிரகணம் நிகழ்கிறது. அப்போது செய்ய வேண்டியதையும், தவிர்க்க வேண்டியதையும், அறிந்து கொண்டால், பலன் கிடைக்கும். இதுகுறித்து ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், சிவாச்சாரியார் கபாலீஸ்வரன் கூறியதாவது: திருக்கணித பஞ்சாங்கப்படி, இன்றைய சந்திரகிரகணம் இந்தியாவில் தெரியும்.
ஆரம்ப காலம் மாலை, 6:18 மணி, மத்திம காலம் இரவு, 7:57 மணி, முடிவு காலம் இரவு, 8:41 மணி. புதன்கிழமையில் தோன்றுவதால், இந்த நாளில் பிறந்தவர்கள் மற்றும் புனர்பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுசம், நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். விநாயகர் மற்றும் சந்திரனுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். கிரகணம் விட்ட பின், இரவு, 8:50 மணிக்கு குளிர் நீரில் குளித்து, வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். கிரகணம் தொடங்கி முடியும் வரை, கர்ப்பிணி பெண்கள், வெளியில் வரக்கூடாது; சந்திரனை பார்க்கக் கூடாது. இவற்றை கடைபிடித்தால், அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.