பதிவு செய்த நாள்
31
ஜன
2018
10:01
வடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞானசபையில் 147 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் 6 திரை நீக்கி ஜோதி தரிசன நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 147வது தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு, 147வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. நேற்று காலை, 7:30 மணிக்கு, சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இன்று முக்கிய நிகழ்வான, தைப்பூச ஜோதி தரிசனம், காலை, 6:00 மணிக்கு நடைபெற்றது, தொடர்ந்து 10:00மணி, மதியம், 1:00; இரவு, 7:00; 10:00 மணி, நாளை காலை, 5:30 மணிக்கு, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.