திருநெல்வேலி: பாபநாசம் கல்யாணி தீர்த்தத்தில் உள்ள அகத்தியரின் துணைவியார் உலோப முத்திரை சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில், தாமிரபரணி ஆறு துவங்கி அகத்தியர் அருவியாக விழுகிறது. அந்த பகுதியில் கல்யாணி தீர்த்தம் அருகே அகத்தியர் மற்றும் துணைவியார் உலோபமுத்திரை ஆகியோரது நின்ற நிலையிலான கற்சிலை உள்ளது.மிகவும் பழமையான இந்த சிலைகளுக்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. உலோபமுத்திரையின் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் உடைத்துசேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்துமுன்னணி அமைப்பினர் இன்று விக்கிரமசிங்கபுரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்து நடவடிக்கை கோரினர்.