பதிவு செய்த நாள்
31
ஜன
2018
11:01
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகி அம்மன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி தைப்பூசவிழா ஜன.,25ல் துவங்கி பிப்.,3வரை நடக்கிறது. விழாவில், நேற்று பெரிய நாயகியம்மன் கோயிலில், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பெரியநாயகி அம்மன் கோயில் ரதவீதிகளில் காலை 10:00 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.